கீரமங்கலம் வகை சாதுச் செட்டியார்கள் தலைமைச் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது



கீரமங்கலம் வகை சாதுச் செட்டியார்கள் தலைமைச் சங்கம்


தலைமைச் சங்கத்தின் நோக்கங்கள் ::

1. உலகெங்கிலும் வாழும் கீரமங்கலம் வகை சாதுச் செட்டியார்களை ஒருங்கிணைப்பதும் அவர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடுதலும்,

2. நம் சமூக மக்கள் கல்வி, தொழில், மேம்பாடு அடைய உதவி செய்தல், வேலை வாய்ப்பு வழி முறைகளை இளைஞர், இளைஞிகளுக்கு வழிகாட்டுதல், நம் சமூக குடும்ப பொருளாதாரத்தை உயர்த்துதல்.

3. நம் சமூக மக்களின் முன்னேற்றத்திற்க்காக கல்வி நிறுவனங்கள், வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் நிறுவதல்,

4. நம் சமூகத்தைச் சேர்ந்த ஏழை. எளியோர், மாற்றுதிறனாளிகளுக்கு கல்வி, மருத்துவம், பொருளாதார வளர்ச்சிக்கு உதவுதல்.

5. நம் சமூக மக்களுக்கு மத்திய மாநில அரசுகளிடமிருந்து சமூக நீதி, பாதுகாப்புகள், உரிமைகள் கிடைக்க பாடுபடுதல்.

6. நம் சமூக மக்களில் ஏழ்மையில் உள்ளவர்களின் திருமணங்களுக்கு உதவுதல்.

7. நம் சமூக மக்களின் மேம்பாட்டிற்க்காக சங்கத்தின் நிதி ஆதாரத்தை பெருக்கி அதன் மூலம் மேலே கூறிய இலட்சியங்களை அடைதல்.

8. நிதி ஆதாரத்தை பெருக்க நன்கொடை வசூலிப்பது, உறுப்பினர்களிடமிருந்து சந்தா வாங்குதல், சங்க பணத்தை மிகவும் நம்பகமானவரிடம் வட்டிக்கு விட்டு பணத்தை பெருக்குதல், சங்கத்திற்கு பரிசு பொருட்கள் மற்றும் அன்பளிப்புகள் பெறுதல்.

9. சங்கத்தின் வருமானத்தையும், சொத்துக்களையும் முழுமையாக சங்க வழிகளுக்கு உட்பட்டு சங்க வளர்ச்சிக்கு உபயோகிக்க வேண்டும். பொறுப்பில் இருப்பவர்கள் இலாபத்திற்காக தன் சார்ந்தோர்களின் உடமையையோ நேரிடையாகவோ மறைமுகவோ சங்க பணத்தை பயன்படுத்தக்கூடாது.

10. திருமணகூடம் கட்டி வருவாய் உயர்த்துதல், நம் சமூக ஏழைகளின் திருமணத்திற்கு இலவசமாக திருமணக்கூடத்தை வாடகையின்றி கொடுத்தல்.

11. உண்மையான கணக்கை வைத்திருப்பதுடன் வரவு -செலவுகளுக்கு ரசீது, பில், cash voucher போன்ற சரியான முறையில் நிர்வாகம் செய்து வருடா வருடம் வரவு செலவுகளை காட்டி பாலன்ஸ் ஷீட் தலைமைச் சங்கம் தலைமைச் சங்க செயற்குழுவிலும், கிளை சங்கங்கள் பொதுக்குழுவிலும், ஒப்புதல் வாங்கவேண்டும்.

12. சங்கத்தின் தேவை என நினைத்தால் அசையும் அசையா சொத்துக்களை வாங்குதல், வாடகை விடுதல், குத்தகை கொடுத்தல் என சங்கத்திற்கு அணுகூலமானவற்றை செய்தல்.

13. ஐந்து ஆண்டுகளுக்கு நம் மக்களையும் ஓரிடத்தில் ஒருங்கினைத்து மாநில சமூக அனைத்து மாநாடு நடத்துதல்.